கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Monday, July 13, 2009

கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் !!!

"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதுபோல், சிறு சிறு தவறுகளே ஒருவரை மிகப்பெரிய பாவத்துக்கு நேராக இழுத்து செல்லும் காரணிகளாக அமைகிறது என்று சொன்னால் மிகையாகாது!
.
ஒரு சிறிய திருட்டு அதை மறைக்க ஒரு பெரிய பொய் அந்த திருட்டை பார்த்துவிட்டனை மிரட்டுவது கைமீறி காரியங்கள் போகும்போது கோபம் அதிகமாகி கொலைவரை கொண்டு சென்றுவிடும்! எனவே சிறிய சிறிய செயல்களில் உண்மையாக நடந்துகொள்ள பழகுவது மிகவும் நல்லது!
உதாரணமாக ஒருவர் தன வீட்டுக்கு பொது சுவர் கட்டும் போது அடுத்தவர் இடத்தில் சுமார் அரை அடி அதிகம் எடுத்து கட்டிவிடுகிறார். பிறகு அளந்து பார்க்கும் போது அவர் செய்த தவறு தெரியவருகிறது. அளக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார். தட்டி கேட்பவருக்கு எல்லாம் எதிரியாகிறார். கடைசியில் இந்த அரையடி இடம் பூதாகரமாக உருவாகி சண்டை நடந்து கொலைவரை போய் போலீஸ் கேஸ் என்று வாழ்நாளை வீணடிக்கிறார்.
"கொஞ்சத்தில் உண்மை உள்ளவனை அநேகத்துக்கு அதிபதியாக வைப்பேன்" என்கிறார் ஆண்டவர்! அதாவது பத்து ரூபாயில் உண்மை இல்லாதவனிடம் பத்தாயிரம் ரூபாயை யாரும் நம்பி ஒப்படைக்கமாட்டர்கள் அதுபோல் அழிந்துபோகும் இந்த உலகப்போருட்களில் நாம் உண்மையுள்ளவராக இராவிட்டால் என்றும் அழியாத மெய்ப்பொருளை பற்றி இறைவன் எப்படி தெரிவிப்பார்? ஆம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கும் கொஞ்ச அதிகாரத்தில், கொஞ்ச சொத்துக்கள் மீது, கொஞ்ச பொறுப்புக்கள் மீது, கொஞ்ச பணத்தின் மீது நாம் எவ்வளவு உண்மையாக அன்பாக நடந்துகோள்கிரோமோ அதற்க்கு தகுந்தாற்போல் ஒருநாள் நாம் அநேகத்துக்கு அதிபதியாவோம் என்று ஆண்டவர் சொல்கிறார்.
.
அனால் இன்று உலகில் கொஞ்சம் செல்வாக்கான பதவி அதிகாரம் கையில் கிடைத்துவிட்டால் போதும், அதை வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடிந்தவரை பிறருக்கு தொல்லை கொடுத்து தங்களுக்கு கிடைத்த பதவிக்கு மிக விசுவாசமாய் மனிதர்கள் நடந்துகொள்கின்றனர்!
.
அலுவலகத்திலோ அல்லது செய்யும் எந்த தொழிலிலும் உண்மை உள்ளவராக இருப்பது மிக மிக அவசியம். சிறு சிறு பொருட்களை திருடுவது, ஏமாற்றி சம்பாதிப்பது, சம்பளத்துடன் லஞ்ச பணத்துக்கும் ஏங்குவது போன்ற சிறு சிறு செயல்கள் இந்த உலகத்தில் நமக்கு பயனுள்ளதுபோல் தெரியலாம் ஆனால் நாளை நம்மை இறைவனுக்கு முன்னால் நிற்க தகுதியற்றவர்களாய் மாற்றிவிடும் என்பதை மறக்க வேண்டாம்!
.
எனவே அன்பானவர்களே பெரிய குற்றங்கள் செய்யாமலிருக்க மனிதன் மிகபெரிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. நாம் செய்யும் மிக மிக சிறிய செயல்களை சற்று ஆராய்ந்து பார்த்து, அடுத்தவருக்கு தீங்கிழைக்காமல் நடதுகொண்டாலே போதும். நாம் பெரிய பாவம் செய்வதிலிருந்து சுலபமாக தப்பித்துகொள்ளலாம்!