கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Tuesday, March 10, 2009

இறுதி தீர்ப்பு இறைவன் கையில்!!!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்ட அன்பு சகோதர சகோதரிகளே!

நம்மெல்லோரையும் விட அதிக பிரயாசபட்ட பவுல் அவர்கள் கூட,
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்."
என்று விசுவாசத்தில் எழுதியிருந்தாலும்
.

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். (கொரி௯:௨௭)
என்று கூறியிருப்பது ஒரு மனிதன் எந்நிலையிலும் ஆகாதவனாகபோக வாய்ப்பிருக்கிறது என்பதை தெரியப்படுத்தத்தான் என்று நான் கருதுகிறேன்.

.
இன்றைய கிறிஸ்த்தவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டால் பரலோகம் தங்களுக்கு எழுதப்படாத சொத்துபோல அநேகர் எண்ணிக்கொள்கின்றனர்.எதோ தாங்கள் எல்லாவற்றிலும் ஜெயித்துவிட்டதாகும் மற்றவர்கள் எல்லோரும் பாவிகள் போலவும் கருத ஆரம்பித்துவிடுகின்றனர் அது சரியா?

.
இன்று உலகில் நடக்கும் அனேக தீவிரவாதங்களை தீனி போட்டு வளர்த்தவர்களும், அருவருப்பான பாலியல் முரண்பாடுகளையும் (ஓரின சேர்க்கை, ஆபாச இனையதளங்கள்) பப்ளிக் பண்ணி, உலகை கெடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கிறிஸ்த்தவ நாடுகளே! இப்படி அநியாயம் பண்ணுபவர்கள் எல்லாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக் பரலோகம் சென்றுவிடுவார்கள் என்று எண்ணுவது தவறு.

.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோ ௧:௧௨)
.

என்ற வார்த்தைகள்படி இரட்சிக்கப்பட்டரவரை கர்த்தர் அனுதினை சபைகளில் சேர்த்துக்கொண்டு வந்தாலும் அந்த சபையில் உள்ள எல்லோரும் பரலோகம் போய்விடுவதில்லை. சபைகளுக்கு கர்த்தர் கொடுக்கும் எச்சரிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக உள்ளது.
.

நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; ............... நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
.

இவைகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாகிய சபைக்கு விடுத்த எச்சரிப்புகள் "ஜெயம்கோள்கிறவன் எவனோ" என்ற வார்த்தை "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் அனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்" என்ற கருத்தையே முன்வைக்கிறது.
.

பத்து கன்னிகைகளும் மணவாளனை காண அழைக்கப்பட்டவர்கள்தான் மணவாளனை காணவேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டு வந்தவர்கள்தான் ஆனால் எல்லாராலும் மனவாளனுடன் உள்பிரவேசிக்க முடியவில்லை என்பதை கருத்தில் கொள்க.

அநேகர் மனம்திரும்பி ஞானஸ்தானம் பெறலாம்! ஆநேகர் ஆண்டவரின் ராஜ்யக்த்துக்கு போக ஆவலாய் இருக்கலாம்! ஆனால் இயேசு சொன்னதுபோல் "பிதாவின் சித்தம் செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல்" சும்மா கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லிக்கொண்டு ஆண்டவரின் வழியை பின்பற்றாதவன், ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழவிரும்பாதவன் அதில் பிரவேசிப்பது இல்லை!

இப்படி வசனங்கள் சொல்கையில், யார் பிதாவின் சித்தத்தை சரியாக செய்தார் யார் மனம்திரும்பி பில்ளைகளைபோல ஆனார் என்றும், யார் வேத பாரகர் பரிசேயருடைய நீதியிலும் அதிக நீதி செய்தார் என்பதையும் எப்படி அறுதியிட்டு சொல்லமுடியும்?
.

எனவே இறுதி தீர்ப்பு இறைவன் கையில்தான் உள்ளது!


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home