கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Tuesday, May 12, 2009

உலகில் பிறந்துவிட்ட எல்லோரும் கெட்டவர்களே!

ஒரு டம்பளர் காப்பியை சூடாக புதியதாக தயாரித்து பாத்திரத்தில் உற்றி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிட்டால்போதும், அது தானாக கெட்டுப்போய்விடும்!
.
எல்லா உணவு பொருட்களுமே அப்படித்தான்!
.
இந்த உலகில் எந்த ஒன்றையும் கெட்டுப்போக வைக்க நாம் பெரிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை! ஆனால் ஒன்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
அதாவது காப்பியை அல்லது உணவுப்பொருட்களை கெட்டுப்போகாமல் வைக்க கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றலாம்.
.
அதிக குளிரான நிலையில் வைத்து பிறகு எடுத்து சூடு பண்ணலாம் அல்லது எப்பொழுதும் சூடாக இருக்கும் ஒரு நிலையில் வைத்து பாதுகாக்கலாம். அனாலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருக்கும் எந்த ஒன்றும் விரைவில் கெட்டுவிடும்
.
இந்த உலகில் பிறக்கும் எந்த மனிதரும் தான் கெட்டுப்போவதற்கு எந்த பெரிய முயற்சியும் எடுக்க வேண்டிய தேவையே இல்லை! யாரும் சொல்லித்தர வேண்டிய தேவையும் இல்லை! சும்மா இருந்தாலே போதும், தானாக கெட்டுப்போய் விடுவார்கள்! கள்ளம் கபடமின்றி சுத்த மனசாட்சியுடன் குழந்தையாக பிறக்கும் ஒவ்வொருவரையும், அவர்கள் வளர வளர பொய் புரட்டு சூது வாது, பொறாமை, வஞ்சம் எல்லாமே தானாகவே வந்து ஆட்கொண்டு விடுகிறது.
.
இதிலிருந்து நல்லதை கெட்டுப்போக வைப்பது இந்த உலகின் இயற்க்கை நிலை என்பதை அறிந்துகொள்ளலாம்! எனவே ஒரு மனிதன் பரிசுத்தமாக இந்த உலகில் வாழ்வது மிக மிக கடினம்!
எனவேதான் பரிசுத்த வேதாகமம் "எல்லோரும் வழி விலகி ஏகமாய் கெட்டுப்போனார்கள்" என்றும் "நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை" என்றும் எடுத்தியம்புகிறது
.
அநேகர் தாங்கள் தீமை எதுவுமே செயவில்லை எனவே நான் மிகவும் நல்லவன் என்று தங்களை பற்றி மிகவும் மென்மையாக நினைக்கின்றனர். அது உண்மையல்ல! கெட்டுப்போன காற்றையே சுவாசித்து வாழும் மனிதர்களுக்கு நல்ல சுத்தமான காற்று எப்படி இருக்கும் என்பதுகூட தெரியாது! அதுபோல் நாம் கெட்டுப்போனது நமக்கே சரிவர தெரியாது! பரிசுத்தமான இறைவனிடம் வந்து பார்த்தபின்தான் தெரியும் நாம் கேட்டுபோய் இருந்தது.
.
கொசுவர்த்தி பற்றவைத்துள்ள ரூமில் உள்ளே நுழைந்துடன் அதன் வாடை நன்றாக தெரியும், ஆனால் சிறிதுநேரம் அந்த வாடையிலேயே இருந்துவிடால் பிறகு பழகிபோய்விடும். அதுபோல் இந்த உலகில் பாவத்தில் பழகிப்போன நமக்கு பரிசுத்தம் என்றால் என்னவென்பது கூட தெரிவதில்லை.
.
மனிதர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லா பாவங்களுக்காகவும் சிலுவையில் தன்னை ஒப்புகொடுத்து, "என்னிடத்தில் வரும் எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றுரைத்த இயேசுவின் பரிசுத்த கரங்கள் ஒன்றே நம்மை நம்மை கெட்டுப்போகாமல் பாதுகாக்க வல்லது!
.
"தேவன் தன ஒரே குமாரனை விசுவாசிப்பவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்ய ஜீவனை அடையும்படிக்கு அவரை (இயேசுவை) தந்தருளி இவ்வலாவாய் உலகில் அன்பு கூர்ந்தார்"
.
மனிதன் கெட்டுப்போவதிலிருந்து மீட்படைய இறைவனால் கொடுக்கப்பட்ட ஈவு அவரின் குமாரனாகிய இயேசுவே! எனவே எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் இன்றே இயேசுவிடம் வாருங்கள் அவரின் பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு அவர் பாதுகாவலின் கரத்தினுள் முழுவதும் அடங்கி இருந்து அவர் வார்த்தைகளின்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் ஆவியில் அனலாய் இருந்து நம்மை கெடுக்க வரும் பாவம் என்ற கிருமிகளை அண்டவிடாமல் அழிக்க முடியும்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home