கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, July 25, 2014

அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.

சில நேரங்களில் ஒருவர் தன்னை கவனிக்காதவர்களின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது தம்மை  யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்பினாலோ, "ஹுகும்" "ஹாஆஆ" என்பது போன்று சத்தமிடுவது உண்டு. அதை எங்கள் ஊர்களில் "செருமாருதல்" என்று சொல்வார்கள்
  
அனேக நேரங்களில், தன்பாட்டுக்கு தனது வேலையை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்கு ஆண்கள்  இந்த செருமாருதலை  பயன்படுத்துவது உண்டு.
  
இங்கு கர்த்தர் இந்த செருமாருதலைதான் "கனைக்கிறான்" என்று சூப்பராக சொல்லியிருக்கிறார்.   
 
"பிறன் மனைவியை இச்சியாதிருப்பாயாக" என்பதை தேவன் கட்டளையாக கொடுத்திருக்க, அந்நாட்களில் இஸ்ரவேல் வம்சத்தார் "பிறன் மனைவியின் கவனத்தை தன பக்கம் ஈர்க்க அவர்கள் பின்னால் நின்று இந்த "கனைக்குதலை" பயன்படுத்தினார்கள் என்பதை அப்படியே பிட்டு வைக்கிறார்.
 
இந்த "கனைக்குதல்" என்ற வார்த்தையை நான் முதலில் படித்தபோது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. காரணம் கர்த்தர் ஒவ்வொரு மனுஷனையும் அவன் அசைவுகளையும், செயல்பாட்டையும் எவ்வளவு ஆழமாக நோக்கிக்கொண்டு இருக்கிறார்! அவரது கண்ணுக்கு மறைவாக என்ன இருக்க முடியும்? என்று எண்ணி எண்ணி வியந்துபோனேன்.
 
இவ்வாறு பிறன் மனைவி தன்னை  கவனிக்க வேண்டும் என்று கனைத்த இஸ்ரவேலருக்கு தேவன் சொல்லும் தண்டனையை பாருங்கள்  
 
எரேமியா 5: 8. அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
 
9. இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்
 
6. ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
 
என்று மிக கடினமான தண்டனையை கர்த்தர் அவர்கள் மேல் அனுமதிக்கிறார். அன்று இவ்வார்த்தைகளை சொன்ன அதே தேவன்தான் இன்றும் ஜீவிக்கிறார் நம்மை கண்காணிக்கிறார். கிருபை வந்தபின்னர் வேறு தேவன் யாரும் மாறிவிடவில்லை அவர் பாவத்தோடு சமரசம் செய்கிறவரும் இல்லை.   
 
எனவே அன்பானவர்கள் நாம் சிறு சிறு செயல்பாட்டில் கூட பரிசுத்தம் அடைய நமது சிறு அசைவுகள் கூட தேவனால் கண்காணிக்கபடுகின்றன அவர் தண்டிப்பார் என்ற எச்சரிப்பு மணி இருதயத்தில் எப்பொழுதும் ஒலிக்கட்டும். 
 
அவர் கண்ணை மறைத்துவிட்டு நாம் செய்துவிடுவதற்கு இங்கு எதுவுமே இல்லை என்ற பயம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வேண்டும். 
 
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
 
தேவன் நம்மை உற்று கவனித்துகொண்டிருக்கிறார் நாம் தவறு செய்துவிட்டு  தப்பிவிட முடியாது என்ற தேவனை பற்றிய அந்த பயமே தேவனுக்கு ஏற்றால் போல் நம்மை நடக்க தூண்டும்.
 
நீதிமொழிகள் 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்
 
 
II கொரிந்தியர் 5:11 ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்
 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home