கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Wednesday, July 30, 2008

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்!

அன்பு சகோதரர்களே!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பரிசேயர் மற்றும் சதுரெயர்கள் வேறு எந்த மதத்தையும் சார்ந்தவர்களோ அல்லது வேறு தேவனை கும்பிடுகிரவர்களோ அல்ல. நமது கர்த்தராகிய தேவனே மோசேயின் மூலம் தங்களுக்கு கொடுத்த நியாயபிரமாண புத்தகத்தை வைத்துக்கொண்டு அதன்படி வைராக்கியமாக வாழ்ந்த, நல்ல தேவபக்தி உள்ளவர்கள்தான்.


ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து அவர்கள் முன் வந்து நின்று கொஞ்சம் வித்யாசமாக உபதேசம் செய்தபோது, அதை கேட்க மனதில்லாமல் அவரை பிசாசு பிடித்தவர் என்றும் தேவ தூஷணம் சொல்பவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து ஒதுக்கினார்கள்.


மோசே மூலம் தேவனே கொடுத்த வேதம் தனது கையில் இருப்பதால் முன்னால் வந்து நிற்கும் தேவனின் ரூபத்தை அவர்கள் அறிய முடியாமல் அவரை பலவிதமாக குற்றம் சாட்டி அதன் அடிப்படையிலேயே அவரை மரண ஆக்கினைக்குள்ளாக தீர்த்தனர் பிறகு சிலுவையில் அறைந்தனர். இப்படி ஆண்டவரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஆண்டவரையே தவறாக தீர்ப்பு வழங்கி ஆண்டவரையே சிலுவையில் அறைய காரணம் என்ன?


அவர்கள் தேவனை முழுமையாக அறியவும் இல்லை தேவனை முழுமையாக நம்பவும் இல்லை மாறாக தங்கள் கையில் உள்ள எழுத்தைதான் நம்பினார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களுக்கு

பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். (யோவா: 5-45) என்று எச்சரித்தார்,

இதன் அடிப்படையில் சில சத்தியங்களை நாம் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
.

இன்றும் வேத புத்தகத்தை கையில் வைத்த்டுக்கொண்டு இதுதான் சத்யம் இதன்படிதான் எல்லோரும் பேசவேண்டும், யார் பேசினாலும் அதற்க்கு வேத ஆதாரம் வேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்படி முடிவெடுப்பதும அதன்படி விவாதிப்பதும் நல்ல காரியம்தான்
ஆனால்
வேதத்தின்படித்தான் தீர்ப்பு என்று சொல்பவர்கள் முதலில் தங்கள் அந்த வேதத்தின்படி வாழ்க்கை வாழ்கிறோமா என்பதை சற்று ஆராய்ந்துவிட்டு பிறரை அதன்படி நியாயம் தீர்ப்பது அவர்களுக்கு நல்லது, அல்லது அடுத்தவரை நியாயம் தீர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் நாம் அடுத்தவரை நோக்கி நீட்டும் கைகள், அதே வேத புத்தகத்தின் அடிப்படையில் ஆண்டவரால் நம்மை நோக்கி நீட்டப்பட சாத்தியங்கள் உள்ளன என்றே சொல்லமுடியும்!

.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; (7:1,2)

என்று வேத வசனம் மிக தெளிவாக சொல்கிறது. யாரையும் நியாயம் தீர்க்க யாருக்கும் இந்த உலகில் அதிகாரம் கிடையாது, மிஞ்சி நியாயம் தீர்ப்பீர்களானால் அதே தீர்ப்பு உங்களை நோக்கி திரும்பும் என்கிறது ஆண்டவரின் வார்த்தை.

வேதத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்:

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. (5:39)

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. (5:40)
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:41,42)

உன் வீட்டில் விருந்து பண்ணும்போது பணக்காரர்களை அழைக்காமல் ஏழை பிச்சைகார்களை அழைத்து விருந்து பண்ணு

போன்ற வார்த்தைகளை யாரும் வாழ்வில் கடைப்பிடித்து நடப்பது மிக மிக கடினம். இன்றுள்ள பல சபைகளில், மற்றும் விசுவாசிகளும் சிறு சிறு காரியங்களை கூட விட்டு கொடுக்க முடியாமல் உலக வழக்குகள் நிலுவையில் உள்ளதும், யாரும் தன்னிடம் உள்ளதை விற்று பிச்சை கொடுக்க மாட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்

.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:14) என்று வேதம் சொல்லும் பட்சத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம் கண்ணில் என்ன இருக்கிறது என்பதை வேத வசன அடிப்படையில் ஆராயாமல், நியாயம் தீர்க்க முதலில் நிற்பது நல்லதல்ல!

ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நித்ய ஜீவன் வாக்களிக்கப்பட்டது எப்படி உண்மையோ அதுபோல

  • "நீங்கள் மனம் திரும்பி பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்:18-3)
    வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்: 5-20)
    என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7-21) .
    "ஆதியில் கொண்ட அன்பை விட்டுவிடுவதுகூட குற்றம்" என்றும்"
  • "ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட பெயரை கூட ஆண்டவரால் கிறுக்கி போட முடியும் என்பதும்" உண்மையே!

நாம் ஒருவரும் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட முடியாது என்பதை இவைகளிலிருந்து நான் அறிந்துகொள்ள முடியும்

.

வேத புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு வசனத்தை காண்பித்து நம்மை ஆகாதவன் என்று ஆண்டவரால் தள்ளவும் முடியும்" அதே நேரத்தில் "அவர்கள் பாவிகள், நிச்சயம் நரகம்தான் போவர்கள் என்று நாம் தீர்மானித்த ஒருவரை அதே வேத வார்த்தை ஒற்றை காண்பித்து அண்டவரால் விடுவிக்கவும் முடியும்.

ஏனெனில்

"மனிதனால் கூடாது தேவனால் கூடும்" என்றும்

"தேவனால் எல்லாம் கூடும்" என்றும் "

'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்"(சகரி 4:6) என்றும் சொல்லும் வசனங்கள், தேவனே கடைசி நியாயாதிபதி என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

நம்மை எப்படி வேண்டுமானாலும் நியாயம் தீர்க்கும் இறுதி முடிவு இறைவன் கையில் இருப்பதால், நாம் யாரையும் குற்றவாளி என்று தீர்க்காமல், பிறர் குற்றங்களை எல்லாம், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மன்னித்து, இருமாப்புகளை அகற்றி, நமக்காகவும் பிறருக்காகவும் இரக்கம் வேண்டி ஆண்டவரிடத்தில் கெஞ்சுவோமாக!

.

அது ஒன்றே நாம் ஆகாதவனாக ஆகிவிடாமல் தப்பிக்க உதவும் வழி!