கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Wednesday, February 11, 2009

வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால்....

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம் தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது" என்பது சம்பத்தப்பட்ட இரண்டாவது வார்த்தை:
"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்(மத்:5:20)
வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பழைய ஏற்ப்பட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று அறிய முடிகிறது. இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்பதில் ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் கிரியையை செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங்களை கூறி கடிந்துகொண்டுள்ளர். கடைசியில் ஆண்டவரை மரண ஆக்கினைக்குள் தீர்த்தவர்களும் அந்த மகா கணம் பொருந்திய வேதபாரகர் பரிசேயர்கள் தான்! (மத் 20:) அப்படி அவர்களை கடுமையாக கடிந்து கொண்ட ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்ளும்போது அனைவருக்கும் போதனையாக சொன்ன வார்த்தைதான் நான் தலைப்பாக எடுத்துக்கொண்ட மத்தேயு 5:20.
வேதபாரகர் பரிசேயரை விட நாம் அதிக நீதி செய்யவேண்டுமென்றால் முதலில் அவர்களின் நீதி என்ன என்பதை நாம் அறிய வேண்டும். எனவே என்னால் முடிந்தவரை அவர்களின் நீதி பற்றி விளக்குகிறேன்.
.
1. அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர்.
வேதபாரகரும் பரிசேயரும் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம் பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பியதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும். அதுபோல் நாமும் நம் கையில் உள்ள வேதாகமத்தில் முழுமையாக பலமுறை படித்து, ஆண்டவர் வேதத்தின் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் எதை செய்யலாம் எவற்றை செய்யக்கூடாது என்ற பொதுவான சத்தியத்தை அறியவில்லை என்றால் ஒருகாலும் அவர்களை விட அதிக நீதி செய்ய முடியாது. எனவே முதலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை தொடக்கம் முதல் முடிவுவரை கிரமமாக படித்து ஆண்டவரின் மனவிருப்பம் என்ன என்பதை முதலில் அறியவேண்டும் அதை அறிவயும் வாஞ்சை வர வேண்டும். அரைகுறை படிப்பு, அங்கொன்றும் இங்கொன்றும் படிப்பு போன்றவற்றின் மூலம் வேதத்தின் உண்மை செய்தியை அறிவது கடினம்!
.
2. அவர்கள் வேத வார்த்தைகளின்மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.
ஆம்! வேதபாரகரும் பரிசேயரும் வேத வாக்கியங்களின் மேல் மிக அதிக வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தனர் எனவேதான் ஆண்டவராகிய இயேசு அதில் சிறிய மாற்றம் செய்வதைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! முக்கியமாக ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமும் நமது கையில் உள்ளவேத வார்த்ததைகள் மீது அறிவுக்கேதுவான வைராக்கியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நமது இஸ்டத்துக்கு ஏற்றாற்போல் வேத வார்த்தைகளை புரட்டாமல், நமக்கு சாதகமாக இருக்கு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிராக இருக்கும் வசனங்களை கண்டுகொள்ளாமல் விடுதல் போன்ற புரட்டுகள் இல்லமால், வேத வார்த்தைகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்வது நல்லது!
.
3. அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் தேவனிட்ட கட்டளைகளை சரியாக கைகொண்டனர்!
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி," மேற்கண்ட வார்த்தைகளை ஆண்டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை சரியாக கைகொண்டனர் என்பதை அறியமுடியும். நாம் எப்படி? புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவராகிய இயேசு சொன்ன போதனைகளில் எத்தனை போதனைகளை நமது வாழ்க்கையில் கைகொள்கிறோம்? என்மேல் அன்பாயிருக்கிரவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறாரே! அவர் கட்டளையிட்டதுபோல் பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோமா? அல்லது நான் நரகத்துக்கு தப்பித்துவிட்டேன் என்று சுய திருப்தி அடைந்துவிட்டு சும்மா இருக்கிறோமா? ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
.
இப்படி வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய வார்த்தைகளை நன்றாக அறிந்து, அதன்மேல் வைராக்கியமாய் இருந்து, அவற்றை கைக்கொண்டு நடப்பதெல்லாம் சாதாரண நீதி என்று இயேசு சொல்லிவிட்டார் ஏனெனில் அவர்களைவிட நம்மிடம் இயேசு அதிக நீதியை எதிர்பார்க்கிறார். உங்கள் நீதி அவர்கள் நீதியைவிட அதிகமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்
சரி இப்பொழுது வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விஷேசித்தவைகள் எது என்று இயேசு குறிப்பிடார் என்பதை இங்கு பார்க்கலாம்
நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும். (மத்:23)
நீதி, விசுவாசம், இரக்கம் இவை மூன்றும் வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விசேஷித்தவைகள் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் அவற்றை பற்றி சற்று ஆராய்வோம்.
.
நீதி:
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; (சங்:89:14)
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.(சங் 97:2) தேவனுடைய சினகசானத்தின் ஆதாரமே நீதியும் நியாயய்மும்தான் என்று சங்கீதக்காரன் இருமுறை சொல்கிறான். எனவேதான் கர்த்தர் வேதத்தில் அனேக இடங்களில் "நீதியாய் நடவுங்கள்" "நீதி செய்ய படியுங்கள்" "நீதியும் நியாயமும் செய்யுங்கள்" (நீதி 29:3,எரே:22:3) என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.
உண்மையான நீதி எப்படிப்பட்டது தனக்கு லாபமா நட்டமா, தன் பிள்ளையா பிறர் பிள்ளையா? தன் ஜாதியா பிற ஜாதியா? தன் மதமா, தன் சபையா, தனக்கு வேண்டியவரா? என்றெல்லாம் ஆராய்ந்து நியாயத்தை புரட்டாமல் பணத்தையும் அந்தஸ்த்தையும் அழகையும் பார்த்து மயங்காமல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு, நியாயமாக செயல்படுவதுதான் நீதியாக நடப்பது ஆகும். வேத பாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த நீதி நம்மிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம்.
.
இரக்கம்!
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புல:3:22) என்று வேதம் சொல்கிறது. "இரக்கப்ப்ட்டுகிறவர் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான இரக்கம் எப்படிப்பட்டது நல்ல சமாரியன் கதையில் வரும் சமாரியனை பாருங்கள், யாரோ ஒரு அறியாதவனுக்காக தன் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க முன்வந்தான். ஆண்டவரின் இரக்கத்தை பாருங்கள் நாம் பாவி என்று அறிந்திருந்தும் நமக்காக ஜீவனை கொடுக்க முன்வந்தார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம்மிடம் தேவையுடன் வரும் ஜனங்களுக்கு நம்மாலியன்ற உதவி செய்கிறோமா? உதவி செய்ய முடியாவிட்டாலும் நமது முடியாமைக்காக வருந்துகிறோமா? அல்லது "தனக்கு போகத்தான் தானம்" என்ற நல்ல உலக கோட்பாடில் வாழ்கிறோமா? என் காதுகள் கேட்க ஒரு பெரிய சபையின் பாஸ்டர் "என்னை யாராவது தேடி வந்துவிட்டால் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது" என்ற சொன்ன வார்த்தையை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! என்னை பொறுத்தவரை என்னிடம் அனுப்பப்படும் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அனுப்பபடுகிரவராகவே நான் கருதுகிறேன். வருபவர் மோசமானவர் என்று நாம் அறியாத பட்சத்தில், நமக்கு உதவே செய்ய திராணி இருந்தும் நிராகரிப்பது சரியான சரியான செயல் அல்ல என்றே கருதுகிறேன். நாம் என்ன நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதை வைத்துதான் ஆண்டவர் அதை அங்கீகரிக்கிராறேயன்றி மற்றபடியல்ல!
இரக்கம் என்பது மஹா பெரியாது! எக்காலத்திலும் யாருக்காகவும் அதவாது தனக்கு அனேக தீங்குகள் செய்த ஒருவனுக்கு கூட மனமுருகுவதுதான் இரக்கம்! விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து ந்து கொல்லவேண்டும் என்று கூடி நின்ற வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த இரக்கம் உங்களிடம் உள்ளதா? என்று நம்மை நாமே ஆராய்வோமாக!
.
விசுவாசம்!
தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆப:2:4)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.(கலா 3:11)
இந்த வேத வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் இங்கு "விசுவாசித்தவர்கள் எல்லாம் பிழைப்பார்கள்" என்று எழுதவில்லை எழுதவில்லை. விசுவாசத்தோடு நீதிமானாய் இருப்பவர்கள்தான் பிழைப்பார்கள் என்றே கூறுகிறது. அதாவது நீதிமானாய் இருக்கிறவன் தன் விசுவாசத்தால் பிழைப்பன் என்பதே சரியான பொருள் என்று நான் கருதுகிறேன். இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இயேசு நமக்காக மரித்தார், ஆண்டவர் வார்த்தைகள் சத்யமானது, அவர் சொனதை செய்வார் என்றெல்லாம் விசுவாசம் இன்று கிறிஸ்த்தவர்கள் எல்லோருடமும் உள்ளது
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக:2:19)
அது தேவைதான்! ஆனால் ஆனால் கிரியை இல்லாத வெறும் விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் திருப திரும்ப சொல்வதை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? (யாக:2:20)
ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. (யாக 2:26)
இன்றைய காலகட்டங்களில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் எவ்வகையான விசுவாசம் வைத்துள்ளனர் என்றே புரியவில்லை! எதாவது ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே உலகிலேயே பெரியவியாதி எதுவோ அது வந்திருக்குமோ என்று பயப்படுவதையும் தடுமாறுவதையும் பலமுறை பார்க்க முடிகிறது. அவர்கள் பயந்தது போலவே மிகபெரிய வியாதிகள் அவர்களை தாக்குகிறது. இது ஏன? விசுவாசமின்மை அல்லவா? தேவன் மேலுள்ள விசுவாசம் எங்கே போனது? எதுவும் புரியவில்லை. பயம் இருக்கும் இடத்தில் விசுவாசம் இல்லை! அசைக்க முடியாத மிக உயர்ந்த விசுவாசந்த்தை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அதை அடைய நாம் அவர் சித்தப்படி வாழ வேண்டும். அவருக்கு முழுமையாக கீழ்படிய வேண்டும் அப்பொழுது மட்டுமே வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உன்னத விசுவாத்தை நாம் பெறமுடியும்.
.
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவா 15:5) என்று நமக்காக பரிதபித்து, ஜீவனை கொடுத்து ஆண்டவர் பெற்றுதந்துள்ள பரிசுத்த ஆவியின் பெலத்துடன் இன்றே முயற்சி செய்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் உன்னத நிலயை அடைவோம்!
நன்றி!




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home