கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, August 29, 2008

திரள் கூட்டத்தோடு ஒத்துப்போகதவன் வஞ்சிக்கப்பட்டவனா?

மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென்று எண்ணுகின்றார்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற கருத்து பல வளர்ந்த உளியர்களிடம் உண்டு!

பெரும்பாலோனோர் தவற விட்ட வெளிப்பாடு ஒருவர்னுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லையா? அல்லது தேவனுக்கு வேறு எந்த வெளிப்படும் தந்து நிறைவேற்ற முடியாதா? அவர் கரங்கள் குறுகியதா? என்பதைப்பற்றி இங்கு ஆராயலாம் என்று கருதுகிறேன்!


வேத புத்தகத்தில் துவக்கத்தில் இருந்து பார்ப்போமானால் பெரும்பாலனோர் தவற விட்டதை கண்டு பிடித்து அறிந்தவர்களே தேவனால் உயர்த்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்!


1. நோவாவின் காலத்தில் பெரும்பாலனோர் நீதையை தவற விட்டு விட்டனர் ஆனால் அவன் ஒருவன்மட்டும் நீதிமானை இருந்ததால் கர்த்தரால் தப்புவிக்கப்பட்டான்.

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6:8)


2. ஆபிரகாம் வாழ்நத அவன் சொந்த தேசத்தில் அனேக கூட்ட மக்கள் வாழ்ந்தனர் ஆனால் தேவன் ஆபிரகாமை மட்டும் அழைத்து

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ" என்றார் காரணம் அவன் பெரும்பாலானோர் தவறவிட்ட விசுவாசத்தில் உறுதி உள்ளவனாக இருந்தான்!

3. ஆபிரகாமின் வேண்டுகதலுக்கு இணங்கி கர்த்தர் லோத்தை விடுவித்தாலும் வேதம் அவனைப்பற்றி சொல்லும்போது

"அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க"

மாமிச இச்சைகளை விடமுடியாமல் பெரும்பாலானோர் தவறவிட்ட பரிசுத்தத்தை லோத்து காத்துக்கொண்டான்.

4. இஸ்ரவேல் ராணுவத்தின் திரள் கூட்ட ஜனங்கள் கோலியாத்தை எதுவும் செய்ய முடியாமல் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தபோது

இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

திரள் கூட்டம் இப்படி நடுங்குகிறதே நானும் நடுங்குவேன் என்று நடுங்க வில்லை மாறாக தனி மனிதனாக

"ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்" என்று பேசி, துணித்து கோலியாத்தை எதிர்த்து ஜெயித்து, பெரும்பாலானோர் தவற விட்ட தேவன் பேரில் தனக்கிருத வைராக்கியத்தை காத்துக்கொண்டான்!

5. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடே யோசபாத் ராஜா இணைந்து கீலேயாத்தில் உள்ள ராமோத் மீது யுத்தம் பண்ண போகலாமா என்று நானூறு தீர்க்கதரிசிகளை வரவழைத்து கேட்டபோது

"கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்."


ஆனால் மிகாயா என்ற ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டும் "மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்." என்ற வார்த்தையை கேட்ட பிறகும் திரள் கூட்டத்தை பின்பற்றாமல் கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று சொல்லி எதிர் மாறாக தீர்க்க தரிசனம் சொன்னான் அப்படியே நடந்தது!

திரள் தீர்க்கதரிசிகள் தவறவிட்ட தீர்க்க தரிசனத்தை மிகாயா பெற்றுக்கொண்டான்

6. இன்னும் எரேமியா தீர்க்கதரிசி தான் வாழ்ந்த காலத்தில் எப்பொழுதும் எதிர்மாறாக தீர்க்கதரிசனம் சொல்லும் தனி மனிதனாகவே வாழ்ந்து அதனால் அனேக துன்பங்களுக்குள்ளனார். அவர் காலத்தில் சமாதானம் உண்டாகும் என்றும் பாபிலோன் ராஜா வரமாட்டான் என்று சொல்லும் அனேக தீர்க்க தரிசிகள் இருந்தார்கள் என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகிறது

"பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?" (எரே 37:18)


ஆனால் இவன் ஒருவன் மட்டும் அந்த திரள் கூடாததை பின்பற்றமால்
"பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்" எரே 37:17 என்று துணிந்து சொன்னான் அது அப்படியே நடந்தது!


பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டில் கூட பவுல் , யோவான், மார்டின் லூத்தர் மற்றும் வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எல்லோருமே திரள் கூட்ட மக்களை போல் இல்லமால் எதாவது ஒரு விதத்தில் விசேஷித்த வெளிப்பாடு உள்ளவராக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் தவறான வழியில் போய்விடவில்லை. அவர்கள் எழுதியதைதான் வேதம் என்று நமது கையில் வைத்துள்ளோம்

நான் சொல்ல விரும்புவது எல்லாம் "பெரும்பாலானோர் தவற விட்டதை அறிந்து கொண்டவர் எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்" என்ற கருத்து வேதத்தின்படி சரியானது அல்ல என்றே கருதுகிறேன். ல்லா விதத்திலும் தற்கால உளியர்களோடு ஒத்துப்போகும் பல போதகர்கள் "பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதில்" கவனமாக உள்ளனர் என்பது அநேகர் அறிந்தது.

எனவே "மரம் எப்படிப்பட்டது என்று அதன் கனிகளாலே அறியப்படும்" என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை நிலைகளை வைத்தே வஞ்சிக்கப்பட்டோரை அறிய முடியுமே தவிர வேறு எந்த விதத்திலும் அறிவது கடினம் என்பது எனது கருத்து!

நாம் வாழும் தற்போதைய கிறிஸ்த்தவ உலகம் பலதரப்பட்ட வித்யாசமான உபதேசங்கள் மற்றும் பிரிவுகளால் நிரம்பியுள்ளது. ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் நாங்கள் செய்வதுதான் சரி, நாங்கள் தான் வசனத்தின்படி சரியாக சொல்கிறோம் என்று சொல்வதோடு அவரவர் ஏதாவது ஒரு வசனத்தை மேற்ற்க்கோள் காட்டி அடுத்தவர் வஞ்சிக்கப்பட்டவர் என்று சொல்வது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் யார் உண்மையில் வஞ்சிக்கப்பட்டவர் என்பது யாருக்கும் தெரியாது!

எனவே அடுத்தவரை நியாயம் தீர்க்கும் முன் நான் மட்டுமல்ல எல்லோருமே "நான் வஞ்சிக்கப்பட்டேனா" என்று கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் யார் வேண்டுமானாலும் வஞ்சிக்கப்படலாம்! மனிதர்கள் போதனையை நம்புவதைவிட ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தங்கள் வழியை சரியானதா என்று தேவனிடத்தில் விசாரித்து அறிவது நல்லது என்று கருதுகிறேன். ஏனென்னில். நாம் எந்த போதனையில் இருக்கிறோம் என்பது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல அவர் சித்தம் செய்கிறோமா மற்றும் தேவனின் வர்த்தைகள்படி பரிசுத்தமாக வாழ்கிறோமா என்பதுதான் மிகவும் முக்கியமானது என்பது அடியேனின் கருத்து!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home