கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Thursday, June 5, 2008

பேரண்டத்தின் ஆரம்பமும் தற்போதைய நிலையும்!

இந்த பேரண்டத்தில் முதலில் தோன்றியது எது?

இந்த பேரண்டத்தில் ஒன்றுமே இல்லாதபோது முதல் முதலில் தோன்றியது வெறும் ஆவி எனப்படும் காற்று மட்டும்தான்.


இந்த உலகில் உள்ள எல்லா பொருளுக்கும் அடிப்படையாய் ஆதாரமாய், எல்லா உயிரினங்களுக்கும் மூலமாய் மூச்சாய் இன்றுவரை இருக்கும் காற்று எனப்படும் ஆவிதான் முதல் முதலில் தோன்றியது. இரண்டு காற்றுகள் சேர்ந்தால் நீராகிறது, நீர் உரைந்தால் ஐஸ் ஆகிறது ஐஸ் கரைந்தால் மீண்டும் ஆவியாகிய முதல் நிலையை வந்தடைகிறது . அதாவது திட, திரவ, வாயு மூன்று நிலையிலும் அது ஒரே நேரத்தில் இருக்கும் தன்மை கொண்டது.

மலை போல எவ்வளவு பெரிய உருவம் இருந்தாலும், ஆவி என்னும் உயிர் இல்லை என்றால் அதனால் எதுவுமே செய்ய முட்யாது. எந்த ஒரு உயிரினத்தின் உடம்பையும் இயக்குவது ஆவி என்னும் உயிர்தான் அது ஆதியில் தோன்றியே ஆவியின் ஒரு பகுதியே!

இரண்டு விதமான ஆவிகள்!

அந்த ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.

2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.


இவை இரண்டும் தான் இந்த பேரண்டத்தில் முதல் முதலில் தோன்றியவைகள்.


நல்ல ஆவியின் படைப்புகளும் தீய ஆவிகளின் அழிப்புகளும்:-


படைக்கும் தன்மை உள்ள நல்ல ஆவியானது தனது வல்லமையால் இந்த பிரபஞ்சத்தையும் அதில் வாழக்கூட்டிய பல்வேறு உயிரினங்களை படைத்த போதெல்லாம், தீய ஆவியானது அதனுள் புகுந்து அந்த படைப்புகளை கெடுப்பது அழிப்பது போன்ற தீய செயல்களை செய்துவந்தது.

ஒரு ஓவியன் தனக்குள்ள திறமையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டான். எதாவது ஒன்று வரைந்துகொண்டே இருப்பான். அதுபோல தன்னிடம் உள்ள வல்லமையால் எதாவது ஒரு நல்லதை செய்யவேண்டும் என்று நினைத்த நல்ல ஆவியானது, பல முறை வெவேறு விதமாக உலகங்களை படைத்தும் தீய ஆவியினால் அது கெடுக்கப்பட்டது. அப்படி இந்த உலகம் பலமுறை படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் டயநோசரஸ்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு ஒரு காலம் ஆகும்.

.

நல்ல ஆவியை போலவே தீய ஆவியும் வல்லமை உள்ளதாக இருந்ததால் நல்ல ஆவியால் தீய ஆவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே வேதனை அடைந்த நல்ல ஆவியானது, தனது பகுத்தறிவால் தீய ஆவியை எப்படியாவது தான் உள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு விரட்ட திட்டம் தீட்டியது.


தீய ஆவியை அடைக்க நல்ல ஆவி தீட்டிய திட்டம்:

ஆவியை பொதுவாக ஒன்றுமே செய்ய முடியாது அதாவது காற்றை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் அதை சிறு சிறு துண்டுகளாக பிரிப்பதன் மூலம் அதன் வல்லமையை குறைக்க முடியும் என்று அறிந்த நல்ல ஆவியானது, தீய ஆவியை சிறுசிறு துண்டுகளாக பிரித்து பின் தனியாக ஒரு இடத்தை உருவாக்கி அதில் அடைத்து வைக்க திட்டம் தீட்டியது.


அந்த திட்டத்தின் நிறைவேருதலும், நல்ல ஆவிக்கும் தீய ஆவிக்கும் நடக்கும் மிகப்பெரிய போராட்டம்தான் அன்றில் இருந்து இன்று வரை நாம் காணும் இந்த உலகத்தின் நீண்ட வரலாறு ஆகும்.

இதில் நல்ல ஆவி என்பது இறைவன் என்றும் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது.


தீய ஆவி என்பது அசுத்த ஆவிகள் ஆகும், அதனுடைய வேலை பொதுவாக இரத்தம் உருஞ்சுவது அல்லது எதாவது கெடுதல் செய்வது கொல்லுவது அழிப்பது போன்ற செயல் செய்வதே.

அதிக சக்தி உள்ள மனிதர்கள் சிருஷ்டிக்கபடுதல்:

உருவாக்கும் வல்லமை உள்ள இறை ஆவியானது தனது திட்டப்படி அசுத்த ஆவியை அடைப்பதற்கு மூன்று அடுக்கு உள்ள பாதாளத்தை உருவாக்கியது. மேலும் தனது வல்லமையால் மிகவும் சக்தி வாய்ந்த அவதார புருஷர்களையும், தேவர்கள் எனப்படுபவர்களையும் சிருஷ்ட்டித்தது. அந்த புருஷர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்க முடியும் அவர்களுக்கு சதையும் எலுமபும் உள்ள உடம்பு கிடையாது . இவர்களே தேவ புத்திரர்கள் எனப்படுகின்றனர். இதில் ஒருவர் எல்லோரையும் விட பெரியவர் அதாவது எல்லோருக்கும் தலைவர் ஆவார்.

அசுத்த ஆவிகளை சிறுசிறு துண்டாக்கவும் பின்பு அவற்றை பாதாளத்தில் வைத்து அடைக்கவேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்த மனிதர்கள் தேவ புத்திரர்கள் எனப்பட்டனர். இறைவன் திட்டப்படி அந்த தேவ புத்திரர்கள் அரக்கர்களாக மாறிய அசுத்த ஆவிகளை அழித்து அவற்றை சிறு சிறு கொசுக்கள் மூட்டை பூச்சிகள் சிலந்திகள் போன்ற இரத்தம் உறுஞ்சும் சிறு பிராணிகளாக மாற்றிய போதிலும், தாங்களும் அந்த அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டு மிக மிக மோசமான காரியங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்படி தேவ புத்திரர்களுக்கு இடையே போட்டி, பொறாமை, வஞ்சம், காமம் தலை விரித்து ஆட ஆரம்பித்தது. அப்பொழுதே தேவன் தேவபுத்திரர்களின் மீடுபுக்காக தன் வல்லமையின் ஒரு பகுதியை மனிதனாக பிறக்கசெய்து அவர்களின் பாவங்களுக்கு பலியாக, மீட்கும் பொருளாக கொடுக்கும் மீட்பின் திட்டத்தை முன்குறித்துவிடார்.


இதனால் இறைவன் இந்த தேவபுத்திரகளை விட்டு பிரிந்து, முதல் வானம் இரண்டாம் வானம் மூன்றாம் வானம் என்று ஏற்படுத்திக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் இறைவன் மிகவும் பரிசுத்தர். அவர் பரிசுத்தராக இருப்பதால்தான் அவரை இறைவன் என்று சொல்கிறோம். அசுத்தம் அவரை நெருங்க முடியாது மேலும் அசுத்தம் உள்ள இடத்தில் அவரால் இருக்கவும் முடியாது.
.

ஆகினும் தேவ புத்திரர்களுக்கும் இறைவனுக்கும் தொடர்புக்காக தேவ தூதர்கள் படைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் கட்டளைப்படி உலகில் தேவ புத்திரருக்கு உதவியாக இருந்துவந்தனர்.
.

தேவ தூதனின் வீழ்ச்சி!
தீமை என்னும் அசுத்தமானது, எதையும் கெடுக்க வல்லதாக இருந்தது. ஒரு துளி சாக்கடை நீர் எப்படி ஒரு கிளாஸ் தண்ணீரை கெடுத்து விடுமோ அதுபோல ஒரு சிறிய அளவு அசுத்த ஆவி ஒருவருள் வந்தாலும் அவர் இறைவனிடம் போக முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அதுபோலத்தான் தேவன் படைத்த மூன்று கூட்ட தூதர்களில் அடிக்கடி பூமி வந்துபோகும் லூசிபர் என்னும் ஒரு தூதன் அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டு தான் இறைவனை போல ஆகவேண்டும் என்றும் இறைவனின் சிங்காசனத்துக்கு மேலாக தனது சிங்காசனத்தை உயர்த்தவேண்டும் என்றும் மனதில் நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் அவனும், அவனை சேர்ந்த ஒரு கூட்ட தூதர்களும் தேவனால் ஆகாதவன் என்று தள்ளப்படார்கள்.

தேவதூதனாகிய லூசிபரின் விழ்ச்சி இறைவனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது! ஏனெனில் அவன் தேவனிடம் அனேகநாட்கள் இருந்ததால் தேவனை போலவே எல்லா காரியங்களையும் செய்ய வல்லவன். அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று எதேன் தோட்டத்தை படைத்து அதில் அவனை இறைவன் வைத்தார்.

ஆனால் தேவன் தன்னை ஆகதவன் என்று தள்ளியதால் மிகவும் ஆத்திரம் அடைந்த லூசிபர், மனம் திரும்பி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பாமல், எப்படியாவது தேவனுடைய இடத்தை பிடிக்க வேண்டும் அல்லது இந்த உலகத்தயாவது தான் தேவனை போல இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ஆதம் ஏவாளின் படைப்பு :
இந்நிலையில் ஆதாம் ஏவாள் இருவரையும் மண்ணினால் இறைவன் படைத்து லூசிபர் இருக்கும் அதே எதேன் தோட்டத்தில் கொண்டு வைத்து அதை பண்படுத்தவும் பாதுகாக்கவும் வைத்தார். இறைவன் ஆதாம் ஏவாளை படைத்ததற்கு முக்கிய நோக்கம் தேவபுத்திரர்கள் மற்றும் விழுந்துபோன தேவதூதர்கள் எல்லோரையும் அசுத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான். தேவனின் மீட்பின் திட்டமானது இரண்டு வகையாக இருந்தது ஆதாம் ஏவாள் பாவத்தில் வீழாமல் இருதால் லூசிபராகிய விழுந்துபோன தேவதூதனுக்கு அவர்கள்மேல் அதிகாரம் இல்லாமல், அவர்கள் மகிழ்ச்சி நிறைந்த, துன்பமற்ற ஒரு வாழ்வை நித்யமாக பெறும்படியும், வீழ்ந்துவிட்டால் தனது வார்த்தை என்னும் வல்லமையை ரட்ச்சகராகிய பூமிக்கு அனுப்பி அனைவர் பாவங்களுக்காக மரித்து அவர் இரத்தத்தின் மூலமாக அனைவருக்கும் மீட்பும் கிடைப்பதாக இருந்தது! ஏனெனில் இரத்தம் என்பது உயிராகவும் அது ஒரு கிரயதொகையாகவும் அதை அசுத்த ஆவிகளுக்கு கொடுப்பதன் மூலம், அசுத்தத்தின் பிடியிலிருக்கும் ஆத்துமாகளை மீட்க முடியும். அதன் அடிப்படையில்தான் இன்றும் இந்து கோவில்களில் சிலவற்றில் உயிர் பலிகள் செலுத்தப்படுகின்றன

அனால் நாமறிந்ததுபோல் ஆதாம் ஏவாளும் ஆண்டவரின் சொல்லுக்கு கீழ்படியாமல், சாத்தானின் வஞ்சக வலையில் மிக சுலபமாக வீழ்ந்து, இறைவன் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை புசித்ததன் மூலம் தானும் சாத்தனுக்கு அடிமைகளாகி போனார்கள்.

இறைவன் என்னும் நல்ல ஆவியானது தீமை இல்லாத ஒரு நல்ல உலகத்தை அமைத்து எல்லையில்லா இன்பத்தை அனுபவித்து மனிதன் என்றென்றும் வழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அன்றில் இருந்து இன்று வரை எல்லாவற்றையும் செய்து வருகிறது. ஆனால் நல்லவைகளாக படைக்கப்பட்ட எல்லாமே தீமைக்கு அடிமையாக போய்விட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உலகில் பிறக்கும் எல்லோரும் பாவத்தில் சாத்தானின் அடிமையாக பிறக்கிறோம். சிறு குழந்தைக்கு கூட பாவம் செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. அது தானாக பொய் சொல்லும் தானாக திருடும். ஒரு கிளாஸ் காப்பியை கெட்டுபோக வைப்பதற்கு நான் எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்க வேண்டியது இல்லை. புதியதாக போட்டு ஒருநாள் மேஜை மீது வைத்துவிட்டாலே தானாக கெட்டுவிடும்! அதுபோல், இந்த உலகசூழல் மற்றும் நமது உடம்பின் தன்மை, நாம் விரும்பினாலும் விரும்பவிடலும் எல்லோரையும் பாவியாக்கிவிடுகிறது! நாமும் பாவம் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கிறோம் ஆனால் அப்படி வாழ முடிவதில்லை! எதாவது இடங்களில் தவறி விடுகிறோம் . இறைவன் எல்லோரையும் நல்லவராகத்தான் படைத்தார் ஆனால் இன்று நாம் தீயவர்களாக மாறியிருப்பது யாருடைய தவறு?

சாத்தன் லூசிபரின் ஆட்சி:-
என்று ஆதமும் ஏவாளும் பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.

அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.


முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.


இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.

இறைவனின் எதிர்பார்ப்பும் அவர் திட்டத்தின் முடிவும் :

இறைவன் ஒவ்வொரு மனிதனை படைக்கும் போதும் இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா, இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா என்று தான் படைக்கிறார் ஆனால் அவன் வளைந்து முழு நிலையை அடையும் பொது இறைவனை தேடி அவர் சித்தப்படி வாழ்ந்து தீமையை ஜெயிக்க முயல்வதை விட தான் எப்படி உழைத்து இந்த நிலை இல்லா உலகத்தில் இன்பமாக வாழலாம் என்றே யோசிக்க ஆரம்பிக்கிறான்.

தீய ஆவி மனித ஆவியோடு இணைத்து இருப்பதால் அதை தனியே பிரித்து பாதளம் அனுப்புவது என்பது முடியாது அது யாருடன் இருக்கிறதோ அவனையும் சேர்த்துக்கொண்டு பாதளம் போய்விடும். தீய ஆவியின் நோக்கமும் அதுதான் மனிதனோடு இணைந்து இருக்கும் வரை இறைவனால் தனை ஒன்றும் செய்ய முடியாது ஏனெனில் இறைவன் இரக்கம் உள்ளவர் அவர் ஒரு மனிதனைகூட பாதாளத்துக்கு அனுப்பி தீய ஆவியுடன் நித்யமாக அடைக்க மாட்டார் என்ற எண்ணத்தில் உள்ளது.

இந்த தீயதையும் நல்லதையும் தனியே பிரிக்கவே இறைவன் என்னும் மாபெரும் வல்லமையின் ஒரு பகுதி பூமிக்கு மனிதனாக வந்து தீய ஆவிகளால் மிககொடூரமாக தாக்கப்பட்டு மரித்து, இந்த உலகில் தனது பரிசுத்தமான ஆவியின் ஒரு பகுதியை மனிதனுக்கு கொடுத்துள்ளது.

அது அந்த பரிசுத்த ஆவியானது இறைவனை வாஞ்சையோடு தேடும் எல்லோருக்குள்ளும் வந்து தங்கி அசுத்தத்தை தனியே பிரிக்க உதவி செய்யும். அதன் துணையுடன் யாராவது ஒருவர் அசுத்தத்தை முற்றிலும் ஜெயித்தால் அசுத்தத்திற்கு மனிதன்மேல் அதிகாரம் இல்லாமல் போய் தனியாக பிரிந்துவிடும் அப்பொழுதுதான் அசுத்த ஆவியானது பாதாளத்தில் அடைக்கப்படும். அதுவரைதான் இந்த உலகம் இருக்கும். அந்த நாள் வரை இறக்கும் மனிதர்கள் அந்த அசுத்தத்தின் பிடியில்தான் இருப்பார்கள் அதுதான் நரகம் எனப்படுகிறது. அது பாதாளத்தின் கீழ்பகுதி ஆகும். நமது இடத்தை நாமேதான் தேர்ந்து எடுத்து கொள்கிரோமேயன்றி இறைவன் யாரையும் பாதளம் அனுப்புபவர் அல்ல!


அசுத்த ஆவி மனிதனுக்குள் வந்து கிரியை செய்யும் பொது உடனடியாக அறிய முடியாது ஆனால் அது போனபிறகு நாம் என் இப்படி செய்தோம் என்று நாமே நினைத்து வருந்துவோம்

இறைவன் ஒரு நல்ல உலகத்தை படைத்து அதில் இருந்து தீமையை அகற்றி மனிதனை என்றென்றும் அதில் நித்யமாக வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் எல்லாவற்றையும் படைத்தார். அவர் நோக்கத்தை எல்லாம் சரியாக நிறைவேற்றியும் வருகிறார். ஆனால் அது நமது சிற்றறிவுக்கு எட்டாத காரணத்தால் நாம் பல விதமாக இறைவனைப்பற்றி சிந்தித்து குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.

நிச்சயமாகவே ஒரு நாள் அவர் எண்ணம் போல் தீய ஆவி இல்லாத ஒரு பரிசுத்த உலகம் அமையும். ஆனால் அதில் எத்தனைபேர்கள் பங்கு பெற போகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது

மேலும் சில உண்மைகள்:

இறைவன் எதையுமே வரிசை கிரமமாக செய்யக்கூடியவர். இடையில் இடையில் புகுந்து காரியங்கள் செய்து குழப்புபவர் அல்ல. அவர் செயல் எல்லாவற்றிலும் ஒரு வரிசை கிரமமும் முழுமையும் இருக்கும். "வெளிச்சம் உண்டாக கடவது" என்று அவர் சொன்னவுடன் வெளிச்சம் உண்டாயிற்று ஆனால் அந்த வெளிச்சம் வருவதற்கு ஒரு சோர்ஸ் வேண்டும் என்றும வெளிச்சம் எப்படி வருகிறது என்பதை மனித அறிவுக்கு எட்ட வைக்க வேண்டும் என்பதற்க்க்காகவும் பிறகு சூரியனை படைத்தார். அது போல் மனிதனையும் பெரியவர்களாகவே உருவாக்கிவிட்ட போதிலும் அவர்கள் நமக்கு புரியும் அளவுக்கு தாயின் வயிற்றில் கருவாக தோன்றி வளரும் ஒரு நியமனத்தை ஏற்றபடுத்தினார். அது போலத்தான் மனிதன் திடு திப் என்று வந்து விட்டான் என்று என்ன முடியாத அளவுக்கு சிறு பூச்சிகளில் இருந்து படிப்படியாவ வளரும் உயிரிகளை படைத்து மனிதனை போல குரங்கை படைத்து பின் மனிதனை படைத்தார். இது எல்லாமே இறைவனின் அளவற்ற ஞானத்தால் உருவாக்கப்பட்டது. அவர் படைத்தார் என்று நோக்கினால் அவர் படைப்பாக தெரியும் அதே நேரத்தில் இது தானாக தோன்றியது என்று நோக்கினால் எல்லாமே தானாக தோன்றியதாக தெரியும். அவர் ஞானம் அளவிட முடியாதது!



to be continued....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home