கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, August 22, 2008

இலக்கம் அறுநூற்றறுபத்தாறு

அன்பு சகோதரர்களே!
.
வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
.
16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.


இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." சம்பந்தமாக வேத பண்டிதர்களிடைய பலவிதமான கருத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!. ஆகினும் வேதத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." என்பது பணம் மற்றும் உலக பொருளையே குறிக்கிறது என்பது புலனாகின்றது. அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட வசனங்களை முன்வைக்க விரும்புகிறேன்:


1. வேத புத்தகத்தில் இந்த அறுநூற்றறுபத்தாறு என்ற வார்த்தை மொத்தம் இரண்டு இடத்தில்தான் வருகிறது ஒன்று இங்கு, இன்னொன்று 2நாளாகமம் 9:13ல் சாலமொனுக்கும் வந்த பொன்னின் அளவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது: 13. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. இதன் மூலம் நாம் "அறுநூற்றறுபத்தாறு" என்பது பணம் அல்லது உலக பொருளை குறிக்கிறது என்பதை அறியலாம்.


2. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து இரண்டு எஜமானுக்கு ஊளியம் செய்ய முடியாது என்று சொல்லும் போது தேவனுக்கும் சாத்தனுக்கும் என்று குறிப்பிடாமல் சாத்தானை "உலக பொருள்" என்று குறிப்பிட்டுள்ளதை நாம் ஆராய்ந்தால் உலக பொருள்மேல் உள்ள பற்றுதான் சாத்தான் என்று உணர்ந்துகொள்ளலாம்.


3. வேதத்தில் என்னென்னவோ பாவம் செய்தவர்களுக்கு எல்லாம் கர்த்தர் மன்னிப்பு கொடுத்தார். தாவீது கொடிய பாவம் செய்தான் ஆனால் மன்னிப்பு பெற்றான். அதுபோல் இஸ்ரவேலின் ராஜாக்கள் பலபேர் பலவிதமான தவறுகள் செய்து மீண்டும் மன்னிப்பு பெற்றுள்ளனர் ஆனால் வேதத்தில் மன்னிப்பை பெறாதவர்கள் வரிசையில் முதலில் நிற்பவர்கள் பணம் மற்றும் உலகபொருள் ஆசை உடையவர்களே என்று பார்க்க முடியும்.


a. நமதாண்டவரை பணத்துக்காக கட்டிகொடுத்த யூதாஸ் (பின்பு குற்றமற்ற இரத்தத்தை காட்டிக்கொடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டும் பயனில்லை)

b. எலிசாவின் வேலைக்காரன் கேயாசி - எலிசாவை போல பெரிய தேவ மனிதனாக மாறவேண்டிய அவன் சாதாரண உலகப்பொருள் மேல் உள்ள ஆசையால் குஸ்டரோகியாக மாறி மன்னிப்பை பெறாமல் போனான்.

c. அமலேக்கியரின் கொள்ளையின் மேல் பரந்த சவுல், அதை கர்த்தருக்கு பலியிடத்தான் கொண்டுவந்தேன் என்று எவ்வளவோ மழுப்பி பார்த்தும் பின்பு பாவம் செய்தேன் என்று புலம்பியும் கர்த்தரால் ஆகதவன் என்று தள்ளப்பட்டு போனான்.


மேற்கண்ட உதாரணங்கள் எல்லாம் உலகபொருள் மீது பற்றுள்ளவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பை பெறமுடியாது என்பதற்கு திருஷ்டான்திரமாக உள்ளன.


இப்பொழுது நான் குறிப்பிட்ட வசனத்தை சற்று ஆராய்வோம் "16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்"


இதில் வலது கை என்பது நம்மிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள் (Possession) மேலுள்ள நம்பிக்கையையும் நெற்றி என்பது சேர்க்கவேண்டும் என்ற சிந்தனையில் உள்ள பணம் அல்லது பொருளையும் குறிக்கிறது. சிறியோர் பெரியோர் எல்லோரும் இதில் எதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும். 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது சேர்த்து வைக்கப்பட்ட பணமோ, அல்லது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இல்லாத எவனும் கொள்ளவும் விற்கவும் முடியாது (இது முற்றிலும் உண்மைதான்.


எப்படியெனில் கையில் பணமோ அல்லது பணம் சம்பாதிக்கும் ஆசையோ இல்லாதவன் ஒரு பொருளும் வாங்கமுடியாது.)


18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது;


உலகத்தில் கணக்கு பார்க்கபடுவதில் மிக முக்கியமானது பணம் தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் பணத்தை கண்டிப்பாக கணக்கு பார்த்தே தீருவான்.


அடுத்து அது மனிதனின் இலக்கமாயிருக்கிறது என்பது மிக தேவ்ளிவாக பணம் என்பதை காட்டுகிறது. பணம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள்தான்.


இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்த உலகத்தில் மிகப்பெரிய சாத்தான் பணம் மற்றும் உலகபொருள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் பணத்தை கையால் தொட்டதாக கூட தெரியவில்லை. ஒரே ஒரு முறை ராயனுக்கு வரி கொடுப்பது பற்றி விளக்கும்போது கூட "ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள்" என்றுதான் சொல்லியுள்ளார் அதை கையில் கூட வாங்கவில்லை எனவே யாராவது வந்து இலக்கம் போடுவார்கள் என்று நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சகோதரர்களே! பணத்தின் மேலும் உலகபோருளின் மேலும் நம்பிக்கை வைப்பவன் இலக்கம் அறுநூற்றறுபத்தாறு உடையவன் ஆவான் என்பது எனது கருத்து.


SudarP

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home