கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, February 6, 2009

பாஸ்டர்கள் கவனத்திற்கு!

இந்த கடைசி காலங்களில் ஒருசில தேவ ஊழியர்களை தவிர தரமான உழியர்கள் குறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அனேக கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றன.

ஒரு மேய்ப்பனானவன் ஆடுகளுக்கு உத்திரவாதி என்பதை வேதம் மிக தெளிவாக போதிக்கிறது! எனவேதான் நீதிமொழிகள்:

"உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு (நீதி: 27:23) என்று போதிக்கிறது.

ஒரு மேய்ப்பவனுக்கு ஆடுகள் மேல் அளவற்ற கரிசனை மற்றும் ஆபத்தில் அவற்றை பாதுகாக்கும் மன பக்குவம் இல்லாமல், கொழுத்ததை அடித்து சாப்பிடும் நோக்கத்தோடு மந்தையை மேய்க்க வருபவர்கள் (எதோ பிழைப்புக்காக பாஸ்டராக வருபவர்கள்) மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் என்றே கருதுகிறேன். உங்களை பார்த்து கர்த்தர் சொல்லும் வார்த்தைகள் மிக கடுமையானது!

தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! (எசே: 34:2) மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். (எரே: 25:34)

இதை படிப்பவர்கள் உடனடியாக நான் அப்படிப்பட்ட ஒரு பாஸ்டர் இல்லை என்று கருதலாம்! ஆனால் எனது கருத்துப்படி தனது சபையில் ரூபாய் 10 காணிக்கை போடும் ஒரு விசுவாசி நடந்து போகும் போது, அவரின் காணிக்கையையும் வாங்கி வாழ்க்கை நடத்தும் ஒரு பாஸ்டர் அவரை கடந்து பைக்கில் கம்பீரமாக போவது சரியல்ல என்றே கருதுகிறேன். அதாவது அவரின் வாழ்க்கை தரத்துக்கு கூடிய ஒரு வாழ்க்கை தரத்தில் வாழக்கூடாது என்பதே எனது கருத்து! அதுதான் கிறிஸ்த்துவும் ஆதி அப்போஸ்தலரும் வாழ்ந்து கட்டிய கிறிஸ்த்தவ வாழ்க்கை ஆகும்.

பவுலடியாரின் வாழ்க்கை நிலையை பாருங்கள்:

  • அவர் ஒரு சொந்த வீடு வைத்து நிலையாக வாழவில்லை
  • அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை
  • அவர் எதையும் தனக்காக சேர்த்து வைக்கவில்லை
  • அவர் எப்பொழுதும் இயேசுவுக்காக ஜீவனை கொடுக்க தயாராக இருந்தார்
  • அவர் உலக இன்பம் எல்லாவற்றயும் குப்பையாக நினைத்து ஒதுக்கினார்
  • அவர் இயேசுவின் சுவிசேஷம் ஒன்றே தன் உயிர் மூச்சாக நினைததார்
  • அவர் அவர் எல்லோரும் கழித்து போடும் அழுக்கை போல வாழ்ந்தார்
  • அவர் அடிபட்டு, வையப்பட்டு, நிர்வாணப்பட்டு சுவிசேஷம் சொன்னார்.
  • அவர் தனது உயிருக்காக ஒருபோதும் பயந்தது இல்லை.

நல்ல வசதியாக எல்லா சுகத்தையும் அனுபவித்து வாழ விருப்பமா? சொத்து சேர்த்து தலைமுறைக்கும் வைத்து விட்டு போக ஆர்வமா? உழைத்து சம்பாதித்து அவரவர் பணத்தில் வாழுங்கள் அது தவறு இல்லை. ஆனால் அடுத்தவரின் காணிக்கையில் ஐந்து ரூபாய் செலவழிக்கும் முன் ஐம்பத்து முறை யோசியுங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். எனவேதான் வேதமும்:

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. (யாக்: 3:1) என்று எச்சரிக்கிறது.

மந்தைக்கு மேய்ப்பராக இருப்பவர்கள் மந்தையை எப்படி மேய்க்க வேண்டும் என்பதற்கும் எப்படி ஒரு முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காண்பிக்க கடமைப்பட்டுள்ளப்னர் என்றும் வேதம் தெளிவாக கூறுகிறது: .

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள் ( பேதுரு 5:2)

ஏனெனில் போதிப்பவர் பொய் சொல்லாதவராக, பொறாமை, பண ஆசை, வஞ்சம் இல்லாதவராக இருந்தால்தான் மட்டும்தான் துணித்து உறுதியாக பொய் சொல்வது தவறு என்று போதிக்க முடியும். மற்றபடி உங்கள் ஜெபத்தால் வியாதிகள் குணமாகலாம், அனேக அதிச அற்ப்புதங்கள் நடக்கலாம், ஏன் உங்கள் பின்னால் ஒரு மிகப்பெரிய கூட்டமே இருக்கலாம் இவற்றில் எதுவும் ஒருவரை ஆடவரின் ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவராக மற்ற முடியாது. அதனால் நித்யத்துக்கு எந்த பலனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். நமது வாழ்க்கை நிலை ஆண்டவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல இல்லை என்றால் நாளை ஆண்டவர் நம்மை பார்த்து

நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லுக்: 13:27) என்று சொல்ல நேரிடலாம்.


Labels:

2 Comments:

Anonymous Anonymous said...

இத‌ற்கு "சில்சாம்" ப‌தில‌ளிக்க‌லாமா..?

March 29, 2009 at 2:46 AM  
Blogger SUNDAR said...

இந்த பிளாக்குக்கு வந்தமைக்கு நன்றி சகோ. சில்சாம்!

இந்த செய்தி சம்பந்தப்பட்ட தங்களின் கருத்தை தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பதிந்துள்ளீர்கள் அல்லவா? அங்கேயே பதிவது நல்லது. ஏனெனில் அது அநேகரின் கவனத்துக்கு உட்பட்ட தளம்.

நன்றி!

April 17, 2009 at 5:33 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home